Thursday, February 23, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பிரித்தானியா ஆதரவளிக்கக் கூடும்-வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட்!

Thursday, February 23, 2012
லண்டன்::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரானதீர்மானத்திற்கு பிரித்தானியா ஆதரவளிக்கக் கூடும் என தெரிவி;க்கப்படுகிறது.

மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா முயற்சித்து வருவதாகவும், இதற்கு பிரித்தானியா ஆதரளிக்கக் கூடும் எனவும்அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.

எனினும், இறுதித் தீர்மானம் குறித்து உத்தியோகபூர்வமாக எதுவும்இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

உள்நாட்டு ரீதியான விசாரணைகளில் போதியளவு முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில் சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதனைத் தவிர வேறு வழியில்லை என அவர்குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனஇலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

காத்திரமான சர்வதேச விசாரணைகள் குறித்து தீர்மான யோசனைமுன்வைக்கப்பட்டால் அதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment