Thursday, February 23, 2012
சென்னை::சென்னையை கலக்கிய வங்கி கொள்ளையர்கள் சென்னை வேளச்சேரி அருகில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுகொல்லப்பட்டனர். சென்னை வேளச்செரியில் வங்கி கொள்ளையர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொள்ளையர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொள்ளையர்கள்
பதிலுக்கு தாக்கியதில் 2 காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 2 போலீசாரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த போலீசாரை பார்த்து ஆணையர் திரிபாதி ஆறுதல் கூறினார்.
கமிஷனர் விளக்கம்...
துப்பாக்கில் சூட்டில் உயிரிழந்த 5 பேரும் வெளிமாநிலத்தவர்கள் என்று காவல் துறை ஆணையர் திரிபாதி தெரிவித்துள்ளார். ரகசிய தகவலின் பேரில் வேளச்சேரியில் நள்ளிரவில் கொள்ளையர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். வீட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையரை வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர். ஜன்னல் வழியே போலீசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்களை தாக்கப்போவதாகவும் கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். கொள்ளையர்கள் தாக்குதலில் 2
பேருக்கு குண்டடிப்பட்டதால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். 1 மணி நேரம் நீடித்த என்கவுண்டரில் 5 பேரும் வீழ்த்தப்பட்டதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.
வடமாநில கொள்ளையர்கள்...
போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 5 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. வங்கி கொள்ளை தொடர்பான போலீஸ் வீடியோவில் இருந்தவர் கும்பலின் தலைவன் என்றும் வீடியோவில் இருந்த நபர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. என்கவுண்டர் நடந்த வீட்டிலிருந்து கட்டுகட்டாக பணம் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொள்ளையர்களின் கூட்டாளிகள் பற்றி போலீசார்
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குகள் என்ன...
கொல்லப்பட்டோர் ஒரே மாத இடைவெளியில் 2 வங்கிகளில் கைவரிசையை நிகழ்த்தியுள்ளனர். முதல் கொள்ளை பெருங்குடி பரோடா வங்கியில் ஜனவரி 23ம் தேதி நடந்தது. வங்கி ஊழியர்களை மிரட்டி 20 லட்ச ரூபாயை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர். கடந்த திங்களன்று சென்னை கீழ்க்கட்டளை ஐ.ஓ.பி. வங்கியில் 2 வது கொள்ளை சம்பவம் நடந்தது. கீழ்க்கட்டளை வங்கியிலும் கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.14 லட்சத்தை சுருட்டி கொள்ளையர்கள் கைவரிசை நிகழ்த்தினர். கொள்ளையர்களை பிடிக்க சுமார் 45 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விசாரணை...
கொள்ளை கும்பல் தலைவன் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளை கும்பல் தலைவனின் மற்ற கூட்டாளி பற்றி அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் மாணவர் சிலரை விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். கும்பலின் தலைவன் தங்கள் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் மாணவர் என்பதால் மாணவர்கள் பீதியடைந்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி அறிய எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிர்வாகிகளையும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எல்லாமே 23ம் தேதி..
சென்னை பெருங்குடி பரோடா வங்கியில் ஜனவரி 23ம் தேதி கொள்ளை நடந்தது. அதே போல் கொள்ளையர்கள் 5 பேரும் பிப்ரவரி 23ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய என்கவுண்டர்...
தமிழ்நாட்டில் என்கவுண்டரில் ஒரே நேரத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாடு போலீஸ் இதற்கு முன் 2002ல் பெங்களூரில் 5 பேரை கொன்றது. பெங்களூரில் தீவிரவாதி இமாம் அலி உட்பட 5 பேர் 2002ல் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நடந்துள்ள மிகப்பெரிய என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2010ல் திண்டுக்கல் பாண்டி உட்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அடையாளம் தெரிந்தது...
சுட்டுக்கொல்லப்பட்ட 5 பேர் யார் யார் என்ற அடையாளம் தெரியவந்துள்ளது. வினோத் குமார், வினய் பிரசாத், ஹரீஷ் குமார், அபே குமார் ஆகியோர் பீகாரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது நபரான சரிகரே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
14 லட்சம் பறிமுதல்
என்கவுண்டர் நடந்த வீட்டில் இருந்து 14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் பயன்படுத்திய 7 துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். எஞ்சிய பணத்தை கைப்பற்ற தேவைப்படின் எஸ்.ஆர்.எம் கல்லூரி விடுதிகளில் சோதனை நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையர்களின் கூட்டாளி வேறு யாரேனும் உள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. கொள்ளையரின் டைரியில் உள்ள முகவரியிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வேறு யாருக்காவது பணைத்தை பங்கிட்டு கொடுத்தார்களா எனவும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. கொள்ளையிட்ட பணத்தை உல்லாசமாக செலவிட்டார்களா என்றும் போலீசார் அய்வு நடத்தி வருகின்றனர்...
கொள்ளையர் குறித்து போலீஸாருக்குத் துப்பு கொடுத்தது திருந்தி வாழும் ரவுடியின் மகள்:
வங்கிக் கொள்ளையர்கள் பதுங்கியிருந்தது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது முன்னாள் ரவுடி ஒருவரின் மகள் என்று தெரிய வந்துள்ளது.
வேளச்சேரி ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள ஏ.எல்.முதலி 2வது தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில்தான் இந்தக் கொள்ளையர்கள் கடந்த 3 மாதமாக தங்கியிருந்தனர்.
மொத்தம் 3 மாடிகளைக் கொண்ட இந்த அபார்ட்மென்ட்டில் கீழ்த்தளத்தில் இந்த வீடு உள்ளது. ரூ.20,000 அட்வான்ஸ் மற்றும் மாத வாடகை ரூ. 5000 கொடுத்துத் தங்கியிருந்தனர்.
தங்களைக் கல்லூரி மாணவர்கள் என்று இவர்கள் கூறியுள்ளனர். மாணவர்கள் என்பதால் வீட்டை வாடகைக்குக் கொடுத்துள்ளார் இந்த வீட்டின் உரிமையாளர். வீட்டு உரிமையாளர் ஒரு முன்னாள் ரவுடி ஆவார். தற்போது திருந்தி வாழ்ந்து வருகிறார்.
வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டதும் அதைப் பார்த்த வீட்டு உரிமையாளரின் மகள் அதிர்ச்சி அடைந்தார். தங்களது வீட்டில்தான் கொள்ளையர்கள் தங்கியிருப்பதை அறிந்த அவர் உடனடியாக போலீஸார் கொடுத்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதுதான் போலீஸாருக்கு பெரும் உதவியாக அமைந்தது.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார், கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோதுதான் அவர்கள் துப்பாக்கியால் சுடவே போலீஸார் திருப்பிச் சுட்டனர். இதில் ஐந்து பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

No comments:
Post a Comment