Thursday, February 23, 2012ஸ்ரீநகர்::காஷ்மீர் பள்ளத்தாக்கின் குரேஸ் மற்றும் சோனாமார்க் பகுதிகளில் இன்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது. ராணுவ படை முகாம்களின் அருகே ஏற்பட்ட இந்த இரண்டு பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.
ராணுவ படையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். துரதிஷ்டவசமாக 9 ராணுவ வீரர்கள் பலியானார்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக மிதமான பனிச்சரிவு ஏற்படகூடும் என வீரர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment