Thursday, February 23, 2012இலங்கை::அமெரிக்கா இலங்கைக்கு எதிராக வதந்திகளைப் பரப்பி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு இலங்கை இணங்கியதாக அமெரிக்காபொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான வதந்திகளினால் இலங்கைக்கு ஆதரவான நாடுகளின்நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக் கூடும் என ராஜதந்திரத் தகவல்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை முறியடிக்க நட்புநாடுகளின் ஒத்துழைப்பைத் தேடுதவில் இலங்கை ராஜதந்திரிகள் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போலியான வாந்திகளைப் பரப்பி இலங்கை நட்பு நாடுகளை திசை திருப்ப அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment