




Thursday, February 23, 2012இலங்கை::ஜெனிவாவில் இலங்கைக்க இந்தியா ஆதரவா? தடுக்க புறப்படுகிறது (புலி)கூட்டமைப்பு:-
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினர் புதிடில்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வு மார்ச்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மார்ச் மாத முதல் வாரத்தில் புதுடில்லிக்குச்செல்லவுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரானபிரேரணையை ஆதரிக்குமாறு இந்தியத் தலைவர்களுக்குக் (புலி)கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்கும் எனவும்குறிப்பிடப்படுகின்றது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையைஆதரிக்கப் போவதாக அமெரிக்கா வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. அத்துடன் ஐக்கியஇராச்சியமும் குறித்த பிரேரணையை ஆதரிக்கவுள்ள நிலையில் குறித்த பிரேரணையை ஆதரிப்பதா?இல்லையா என்பது குறித்து புதுடில்லி தொடர்ந்து அமைதி காத்து வருகின்றது.
இந்த விடயத்தில் புதுடில்லி எந்தத் தரப்பையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகிக்கக்கூடும் என்ற எதிர்வுகூறல்களும் உள்ளன. இந்த நிலையில் மார்ச் மாதம்முதல் வாரத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் செல்லவுள்ளனர்.அவர்கள் அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தமது கோரிக்கைகளைவலியுறுத்துவர் என்று அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்தப் பயணத்தின்போது மன்மோகன் சிங்கைச் சந்திப்பபு (புலி)கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் என்றபோதும் இதுவரை அவரைச் சந்திப்பதற்கான திகதி உறுதிசெய்யப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment