Thursday, February 16, 2012சென்னை::திமுகவுக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது பத்திரிகா தர்மம் அல்ல. அப்படிப்பட்ட செய்திகளைப் புறக்கணித்து விட்டு கழகப் பணியாற்ற வேண்டும் தொண்டர்கள் என்று திமுக தலைமைக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்த செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.அவரும் அதற்குப் பதிலளித்தார். அப்போது ஒரு செய்தியாளர், திமுக தலைவர் பதவியைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டபோது கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார் அழகிரி. இது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.
இந்த நிலையில், திமுக தலைமைக் கழகம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில்,
கழகத்திற்கு எதிராக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது பத்திரிகா தர்மம் அல்ல. சிலரின் வஞ்சகப் போக்கை கழகத்தினர் புரிந்துகொண்டு, அத்தகைய செய்திகளைப் புறக்கணித்து கழகப் பணி ஆற்றிடுவீர் என தொண்டர்களுக்கு அது வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment