Thursday, February 16, 2012

மண்மேடு சரிந்ததில் இரு சிறுவர்கள் பலி!

Thursday, February 16, 2012
இலங்கை::வெலிமடை பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

16 வயது மற்றும் 11 வயது சிறுமி ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த சிறுவர்களுடன் அவர்களது பாட்டி வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவருக்கு இந்த விபத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த இரண்டு சிறுவர்களது சடலங்கள் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment