Thursday, February 23, 2012இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை பக்கச்சார்பாக செயற்படக் கூடாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
உறுப்பு நாடுகளை உதாசீனம் செய்யும் போக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை கைவிட வேண்டுமேன அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் ஜெனீவா கிளைக்கான இலங்கைப் பிரதிநிதி தமரா குணநாயகம் இது தொடர்பில் கேள்வி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் காரணங்களுக்காக உறுப்பு நாடுகளை உதாசீனம் செய்யும் நடைமுறை கைவிடப்பட வேண்டுமென பல உறுப்பு நாடுகள் விரும்புவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment