Thursday, February 23, 2012

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு அறிவித்துள்ளது!

Thursday, February 23, 2012
இலங்கை::தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு அறிவித்துள்ளது:-

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை பெயரிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை, தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை பெயரிடுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டால், தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், இதுவரையில் எவ்வித காத்திரமான தீர்வுத் திட்டங்களும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு பிரதிநிதிகளை பெயரிட்டால் மட்டுமே தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை தொடர முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment