Thursday, February 23, 2012இலங்கை::இரண்டாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான தனது மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை ஆட்சேபித்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 30 ஆம் திகதி நடைபெறும் என உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் 30 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தது. அதை ஆட்சேபித்து பொன்சேகா தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ஆட்சேபித்து பொன்சேகா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மே 30 ஆம் திகதி நடத்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் என்.ஜி.அமரதுங்க, எஸ்.ஐ. இமாம், பிரியசத் தீப் ஆகியோரடங்கிய குழாம் நேற்று தீர்மானித்தது.
No comments:
Post a Comment