Thursday, February 23, 2012

புலிகள் அச்சுறுத்தல்: இலங்கை நபர் தகவல்

Thursday, February 23, 2012
திண்டுக்கல்::திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட இலங்கை வாலிபர், புலிகளுக்கு பயந்து தமிழகம் வந்ததாகக் கூறியுள்ளார். இலங்கை, கிளிநொச்சி கிஷ்கிந்தபுரத்தைச் சேர்ந்தவர் கஜன், 28. கடந்த 2009 ஜூலையில், ஒரு மாத விசாவில் சென்னை வந்தார். தாய் நாடு செல்லாமல், திண்டுக்கல் நாகல்நகரில் வசித்தார். இவரை, போலீசார் கைது செய்தனர்."கியூ' பிரிவினர் நடத்திய விசாரணையில், ""இயக்கத்தில் சேருமாறு புலிகள் வற்புறுத்தினர். இதனால் அஞ்சி, தமிழகம் வந்தேன்'' என கூறியுள்ளார். இதையடுத்து, திண்டுக்கல் சிறையில் இருந்த அவர், சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

No comments:

Post a Comment