Thursday, February 16, 2012இலங்கை::பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வரும் 54 நாடுகளை சேர்ந்த தூதுக்குழுவினர் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவதன் மூலம் அங்கு மேற்கொள்ளப்படும் நல்லிணக்கம் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகள் குறித்து நேரடி தகவல்களை பெற முடியும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.
இத்தூக்குழுவினர் வட மாகாணம் உட்பட நாட்டின் எப்பாகத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவதன் மூலம் அங்கு மேற்கொள்ளப்படும் நல்லிணக்கம் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகள் குறித்து நேரடி தகவல்களை பெற முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தின் ஊடாக குறித்த தூதுக்குழுவினர் மூன்றாம் தரப்பினரினால் வழங்கப்படும் தகவல்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதை அறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் 58ஆவது கூட்டத்தொடர் ஏற்பாடுகள் தொடர்பாக கண்கானிப்பதற்காக தூதுக்குழுவொன்று தற்போது இலங்கை வந்துள்ளது.
இத்தூதுக்குழுவினர் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு கருத்து தெரிவித்த பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் நிறைவேற்று குழுவின் குழுவின் தலைவர் சேர். அலன் ஹசலதர்ஸ்ட்,
யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் இடம்பெறும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பிர்களிடம் காண்பிப்பதற்கு பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் கூட்டத்தொடர் சிறந்த தெரிவாகும்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தூக்குழுவினர் இங்கு நடைபெறும் செயற்திட்டங்களை நேரடியாக அவதானிக்க முடியும்" என்றார்.
தற்போது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தொடர்பில் கருத்து கேட்ட போது, தனிநபர்கள் குறித்து பேசுவதற்கு இது உகந்த சந்தர்ப்பமல்ல" என ஹசலதர்ஸ்ட் தெரிவித்தார்.
கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பியதற்கு ' இன்று சிறந்த ஜனநாயகத்தை தேடுவது கடினம்' என அவர் தெரிவித்தார்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகத்தை பெறுவதற்கான உதவிகளை பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கம் வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் தலைவராக சமல் ராஜபக்ஷ செயற்படுகின்றார். இந்நிலையில் இம்மாநாடு இலங்கையில் முன்றாவது தடவையாக நடைபெறவுள்ளது. முன்னர் 1976 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் தூதுக்குழுவினர் பிரதமர் தி.மு.ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொள்ளும் இத்தூதுக்குழுவினர் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார், யாழ். ஆயர் தோமஸ் சௌந்தர்நாயம் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.
No comments:
Post a Comment