Thursday, February 16, 2012

சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி!!!

Thursday, February 16, 2012
சிங்கப்பூர்::இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அந்நாட்டு ஜனாதிபதியை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு சிங்கப்பூர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு தரப்புடனும் தொடர்புடைய முக்கிய விடயங்கள் தொடர்பாக இருநாட்டு ஜனாதிபதிகளும் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இருதரப்புடனும் தொடர்புடைய முக்கிய திட்டங்கள் தொடர்பில் தமது மகிழ்ச்சியை தெரிவித்த சிங்கபூர் ஜனாதிபதி டொனி டென் கென் ஜம் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து செயற்படுவது முக்கியமானதென கூறியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சிங்கப்பூர் முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு தாம் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக சிங்கப்பூர் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூனிற்கும்,ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மிக குறுகிய காலத்திற்குள் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தியை வரவேற்றுள்ள அந்நாட்டு பிரதமர், இந்த அபிவிருத்தி பணிகளில் இணைந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமையை இட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை முதலீட்டு சபைக்கும், சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத்திற்கும் இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை அதிகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment