Wednesday,February 22,2012திருப்பூர்::தென்னை மற்றும் பனை மரங்களில் உற்பத்தியாகும் கள்ளை, மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றி விற்பனை செய்வது குறித்து அறிய, விவசாயிகள் குழு இலங்கை செல்கிறது.பனை மற்றும் தென்னை மரங்கள் நிறைந்த நாடுகளில், இலங்கை முக்கிய இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பகுதியில், பனை மரங்களும்,கொழும்பு பகுதியில் தென்னை மரங்களும் அதிகளவில் உள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் மது வகைகள்<, "இந்தியாவில் உ<ற்பத்தியாகும் அயல்நாட்டு மது' (ஐ.எம்.எப்.எல்.,) எனப்படுகின்றன. இவை, சர்க்கரை ஆலை கழிவான, மொலாசஸ் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
இதுபோன்ற மது வகைகள், இலங்கையில், அந்த நாட்டின் தயாரிப்பாக பெயரிடப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் பனை, தென்னை பொருட்களான இளநீர், கள், கருப்பட்டி, தேங்காய் போன்ற மூலப் பொருட்களைக் கொண்டு உற்பத்தியாகி, உலக அளவில் சந்தைப்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் திருச்சி, சென்னை விமான நிலையங்களில், இலங்கையின் மது வகைகள் விற்பனையாகின்றன.
இலங்கையில், கள் பதப்படுத்தப்பட்டு, இரண்டாண்டு வரை கெடாமல், டப்பா மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் அன்னிய செலாவணியும் கிடைக்கிறது.கள்ளை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றிச் சந்தைப்படுத்தும் தொழில் நுட்பம் மற்றும் மதுபானம் தயாரிப்பு முறை குறித்து கண்டறிய, ஒரு குழு, இலங்கை செல்ல உள்ளது.தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி மற்றும் அமைப்பாளர் துரைசாமி ஆகியோர் தலைமையில், ஏழு பேர் கொண்ட குழு, சென்னையில் இருந்து, வரும் 26ல் புறப்பட்டு, கொழும்பு செல்ல உள்ளது. மார்ச் முதல் தேதி, இக்குழு சென்னை திரும்புகிறது.
No comments:
Post a Comment