Wednesday,February 22,2012இலங்கை::ஈராக்கில் இலங்கைத் தூதரகத்தை மீண்டும் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்காக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் டபிள்யூ.எம்.செனவிரத்ன, ஈராக் சென்றுள்ளதாக அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க குறிப்பிட்டார்.
ஈராக்கில் தூதரகத்தை நிறுவுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் அந்தநாட்டிற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறினார்.
ஈராக்கில் தூதரகத்தை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அண்மையில் ஜனாதிபதியில் வெளிவிகார அமைச்சிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணி்ப்பாளர் சரத் திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment