Wednesday, February 22, 2012

சோமாலியா கொள்ளையர்களிடம் இருந்து கப்பல்கள் மீட்பு: 220 இந்திய மாலுமிகள் விடுவிப்பு!

Wednesday,February 22,2012
புதுடெல்லி::அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்திருந்த வர்த்தக பிரதிநிதிகளின் குழுவினரை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன் நேற்று சந்தித்து பேசினார். அவர் கூறுகையில்-

சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்ட வர்த்தக கப்பல்களை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர். மேலும், அவற்றில் இருந்த 242 இந்திய மாலுமிகளில் 220 மாலுமிகள் பத்திரமாக விடுவிக்கப்பட்டு உள்ளனர். மீதி உள்ள 22 இந்திய மாலுமிகளை விடுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, கரையோர பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான இந்தோ-அமெரிக்கா கட்டமைப்பின் அடிப்படையில் கடற்கொள்ளையை எதிர்கொள்வதற்காக, இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயல்படலாம் என்றும் அவர் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment