Wednesday,February 22,2012இலங்கை::செவனகல பிரதேச வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியரின் வீட்டிலுள்ள நீர்த்தாங்கியில் விஷம் கலக்கப்பட்டமை இராசயன பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரசாயன பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் அண்மையில் அம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
சந்தேகநபரான குறித்த வைத்தியர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment