Wednesday,February 22,2012நாகப்பட்டிணம்::நாகை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி இலங்கை மீனவர்கள் அட்டகாசம் - 6 பேர் படுகாயம்:-
நாகப்பட்டிணம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதல் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்றிரவு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 6 படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் படகுகளில் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக மீனவர்கள் உடனடியாக அங்கிருந்த படகுகளை வேகமாக கரைக்கு செலுத்தினர். அப்போது, தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் அரிவாளை கொண்டு தாக்கினர். இதில் 6 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
பலத்த காயத்துடன் கரை திரும்பிய மீனவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்த வந்து மீனவர்களிடம் தாக்குதல் பற்றி விசாரித்தனர்.
மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வு நாகை மாவட்ட மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment