Wednesday,February 22,2012சென்னை::தானே புயல் நிவாரண நிதிக்கு நேற்று அமைச்சர்கள் பலர் நிதியளித்தனர். மொத்தம் ரூ.112.2 கோடி குவிந்தது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 30 - ந் தேதியன்று தமிழகத்தை தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று (21.2.2012) தலைமைச் செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள். சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி சமூக நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் 1 கோடியே 55 லட்சத்து 5 ஆயிரத்து 112 ரூபாய்.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் 54 லட்சத்து 99 ஆயிரத்து 897 ரூபாய்.
பொதுப் பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் பொதுப் பணித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் 90 லட்சத்து 3 ஆயிரத்து 211 ரூபாய்.
ஊரகத் தொழில் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் 55 லட்சத்து 88 ஆயிரத்து 108 ரூபாய்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ரமணா தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் 6 லட்சத்து 91 ஆயிரத்து 395 ரூபாய் மற்றும் தனது சொந்த பங்களிப்பான 5 லட்சம் ரூபாய், என மொத்தம் 11 லட்சத்து 91 ஆயிரத்து 395 ரூபாய்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எஸ்.டி. செல்லபாண்டியன் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் 44 லட்சத்து 48 ஆயிரத்து 717 ரூபாய்.
இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் இந்து சமய அறநிலையங்கள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் 15 லட்சத்து 43 ஆயிரத்து 593 ரூபாய்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ஏ. கஹம்மத்ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் 31 லட்சத்து 98 ஆயிரத்து 709 ரூபாய்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் 11 லட்சத்து 29 ஆயிரத்து 161 ரூபாய்.
தமிழ்நாடு அரசின் புதுடில்லிக்கான சிறப்புப் பிரதிநிதி அ. அசோகன் புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் 76 ஆயிரத்து 22 ரூபாய் மற்றும் தனது சொந்த பங்களிப்பான 1 லட்சம் ரூபாய், என மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 22 ரூபாய்.
யூனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் சார்பாக அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜி. ஸ்ரீனிவாசன் 1 கோடி ரூபாய்.
சென்னை, நங்கநல்லூர், ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் அறக்கட்டளை சார்பாக அதன் நிறுவனர் எஸ். ரமணி அய்யர் 10 லட்சத்து 15 ரூபாய். தமிழக முதலமைச்சர் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 5 கோடியே 82 லட்சத்து 83 ஆயிரத்து 940 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று (21.2.2012) அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 112 கோடியே 2 லட்சத்து 89 ஆயிரத்து 338 ரூபாயாகும்.
No comments:
Post a Comment