Saturday, February 25, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைப்பிரிவின் ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்பேன்-இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா:-
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைப்பிரிவின் ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்கப் போவதாக இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஆசிய பசுபிக் பிராந்திய வலய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே ஆசிய பசுபிக் நாடுகளின் விருப்பமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. நான் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டமைக்கு குழுவின் தலைவர் லூயிஸ் பிறெசெற்றே எதிர்ப்பை வெளியிட்டார்.
எனினும், கடந்த 22, 23ம் திகதிகளில் நடைபெற்ற ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்திலும் நான் கலந்து கொள்வேன் என சவேந்திர சில்வா திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளதாக இலங்கையின் தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment