Saturday, February 25, 2012இலங்கை::போரின் இறுதிக்கட்டத்தில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை, ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கும் எந்த அவசியமும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போது, பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். போர் குற்றங்கள் குறித்து பதிலளிக்க பொருத்தமான நபர் சரத் பொன்சேக்காவே என அவர்கள் கூறியிருந்தனர்.
No comments:
Post a Comment