Saturday, February 25, 2012
புதுடெல்லி::கூடங்குளம் போராட்டத்தை அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ அமைப்புகள் தூண்டிவிடுவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. கூடங்குளத்தில் ரஷ்ய ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என்று சில அமைப்புகள் பல மாதங்களாக போராடி வருகின்றன. இதனால் அணுமின் நிலையத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘அமெரிக்காவை சேர்ந்த சில தன்னார்வ அமைப்புகள், கூடங்குளம் அணு
உலைக்கு எதிரான போராட்டங்களை தூண்டி விடுகின்றன. இந்தியா எரிசக்தி துறையில் முன்னேறுவதை அவை விரும்பவில்லை’ என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார். பிரதமரின் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் கடாகின் கூறுகையில், ‘‘பிரதமர் மன்மோகன் சிங்கின் பேட்டியை படித்தேன். நீண்ட காலமாக எங்களுக்கும் இதே சந்தேகம் இருந்து வந்தது. புகுஷிமா அணுஉலை விபத்து ஏற்பட்டு 6 மாதங்கள் வரை யாரும் வாய் திறக்கவில்லை. பின்னர் திடீரென போராட்டம் நடத்துகின்றனர். கூடங்குளம் அணுமின் நிலையம், உலகிலேயே சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது’’ என்றார்.

No comments:
Post a Comment