Saturday, February 25, 2012

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாக 3 இந்தியர்கள் பிரசாரம்!

Saturday, February 25, 2012
வாஷிங்டன்::அமெரிக்க அதிபர் தேர்தலில், பாரக் ஒபாமாவுக்கு ஆதரவாக 3 இந்திய வம்சாவளியினர் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 6ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். முக்கிய எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் ரோம்னி போட்டியிடுகிறார். இருவர்கள் இருவருக்கும் இடையில் பலத்த போட்டி எழுந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடியால் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரின் ஓட்டுகளை கவர ஒபாமா திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவில் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களுடைய ஓட்டுகளை கவர, ஒபாமாவுக்கு ஆதரவாக 3 இந்திய வம்சாவளியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். நடிகர் கல்பன் மோடி, கலிபோர்னியாவின் முதல் பெண் அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸ், சாய் அய்யர் ஆகிய 3 பேர், ஒபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். ஒபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய 35 பேர் குழுவை ஆளும் ஜனநாயக கட்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த குழுவில் 3 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment