Wednesday, February 15, 2012

அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது!

Wednesday, February 15, 2012
இலங்கை::அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக, அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளேக் வெளியிட்டுள்ள கருத்து மூலம் இந்த விரோதம் வெளிப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 388 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதேவேளை, அவசரமாக இந்த அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது. ஜனநாயக ஆட்சி நிலவும் இலங்கையில் இந்த அறிக்கையின் பரிந்துரைகள் பற்றி ஆராய்ந்ததன் பின்னரே, அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்த முடியும்.

அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் கூட கடக்காத நிலையில் பரிந்துரைகள் அமுல்படுத்தவில்லை என குற்றம் சுமத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என்பதனைக் காரணம் காட்டி இலங்கைக்கு தண்டனை விதிக்க அமெரிக்கா முயற்சி செய்கின்றது என ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

No comments:

Post a Comment