Wednesday, February 15, 2012இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதும் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடையும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோ சனையை அரசாங்கம் கோரியுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக் கப்பெற்றதும் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தினகரனுக்குத் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்து ரைகளை நிறைவேற்ற இலங்கை தவறி விட்டதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் மரியா ஒட்டேரே நேற்றுமுன்தினம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார். இது தொடர்பில் கருத்துக் கேட்டபோதே வெளிவிவகா பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதுவிடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி வெளிவிவகார அமைச்சர், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சட்டச்சிக்கல்கள் குறித்து சட்டமா அதி பரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெற்றதும் அவற்றை நடைமுறைப் படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டி யேற்பட்டால் அதற்கும் அரசாங்கம் நட வடிக்கை எடுக்கும். சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்ற பின்னரே பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக் கைகளை அரசாங்கத்தால் கூற முடியும்.
பெப்ரவரி மாதத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம். அதன் பின்னர் அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் நட வடிக்கைகள் பற்றி நாம் உலக நாடுகளுக்கு விளக்கமளிப்போம். அந்நேரத்தில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடையும்.
சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைப்பதற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு நிறைவேற்றுவோம், அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்போம் என்று கூறமுடியாது என வெளிவிவகாரப் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment