Wednesday, February 15, 2012

2 வாரங்களில் விரிவான பதில்: உதயகுமாருக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி வழக்கறிஞர் பதில்!

Wednesday, February 15, 2012
சென்னை::கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு உதவிப் பெறுவதாக கூறியது தொடர்பாக உதயகுமாருக்கு இன்னும் 2 வாரங்களில் விரிவான பதில் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய அரசின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி, உதயகுமார் தலைமையில் அங்கு பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை நடத்த உதயகுமார் தலைமையிலான தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதி கிடைத்து வருவதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த உதயகுமார், அமைச்சர் நாராயணசாமி மன்னிப்புக் கேட்கக்கோரி வழக்குத் தொடரப்போவதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து வழக்கறிஞர் மூலம் நாராயணசாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் உதயகுமாருக்கு, நாராயணசாமி சார்பில் இடைக்கால பதில் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரங்களில் விரிவான பதில் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதுவரை சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment