Friday, February 17, 2012இலங்கை::எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து தமது கட்டணங்களையும் உயர்த்தியுள்ளதாக இலங்கை மீற்றர் டெக்ஸி சேவை சங்கம் குறிப்பிடுகிறது.
இதனடிப்படையில் முதலாவது கிலோமீற்றருக்கான 50 கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படாது எனவும் இரண்டாவது கிலோமீற்றருக்காக இதுவரை அறவிடப்பட்டு வந்த 30 ரூபா கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் 32 ரூபாவாக உயர்த்தியுள்ளதாகவும் மீற்றர் டெக்ஸி சங்கத்தின் செயலாளர் ஆர்.பீ.லால் காலிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வாரமும், நான்கு மாதங்களுக்கு முன்னதாகவும் இரண்டு தடவைகள் எரிபொருளின் விலை 12 ரூபாவால் உயர்த்தப்பட்ட போதிலும் தங்கள் கட்டணங்களை உயர்த்தவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment