Friday, February 17, 2012லாகூர்::இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு சார்பில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் ‘இந்தியா ஷோ’ என்ற கண்காட்சி நடந்தது. இந்திய தயாரிப்புகள் பற்றி பாகிஸ்தானில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 11-ம் தேதி முதல் 3 நாட்கள் கண்காட்சி நடந்தது. இதில் 50-க்கும் அதிகமான இந்திய கம்பெனிகள் ஸ்டால்கள் அமைத்திருந்தன. நகைகள், நவரத்தின கற்கள், காஸ்அழகு சாதன பொருட்கள், கலைபொருட்கள், இயந்திர உதிரி பாகங்கள், கெமிக்கல் என பல்வேறு வகையான பொருட்கள் 110 ஸ்டால்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வரலாற்று சிறப்புமிக்க இந்த கண்காட்சியை பாகிஸ்தான் வர்த்தக துறை அமைச்சர் மக்தூம் அமின் பாகிம் தொடங்கி வைத்தார். 60 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர். இதற்கிடையில், கண்காட்சியின் 2-வது நாளில், கமல் கந்த் என்ற வியாபாரியின் வைர நகைஸ்டாலில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் திருடு போனது. இதையடுத்து போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கமலிடம் விசாரணை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதல்வர் ஷாபாஸ் ஷரீப், திருடர்களை உடனே பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், நெக்லஸை திருடியதாக முகமத் ஷகில், முகமது சலீம் ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. போலீஸ் கண்காணிப்பாளர் மாலிக் கூறுகையில், ‘நெக்லசை சலீம் உதவியுடன் ஷகில் திருடியுள்ளார். 48 மணி நேரத்தில் நகை மீட்கப்பட்டுள்ளது’ என்றார்.
No comments:
Post a Comment