Saturday, February 25, 2012ஒக்ஸ்போட்::நியூஸிலாந்தின் ஒக்ஸ்போட் கென்டபெரி பிரதேசத்தில் இலங்கையர் ஒருவர் தீயிட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
டொமைன் வீதியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து 28 வயதான சமீர சந்திரசேன என்ற குறித்த இலங்கையர் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரின் சடலம் முழுமையாக தீயினால் எறியுண்டிருந்தது.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் இரண்டு பேரை கைதுசெய்துள்ளனர்
அவர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதேவேளை, தீயினால் பாதிக்கப்படுவதற்கு முன்னர், சந்திரசேனவின் உடலில் அடிகாயங்கள் இருந்தமை குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment