Saturday, February 25, 2012

அமெரிக்காவில் இந்திய வியாபாரி சுட்டுக் கொலை!

Saturday, February 25, 2012
நியூயார்க்::அமெரிக்காவில் மளிகை கடை நடத்திய இந்தியர் மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜார்ஜியா மாநிலம் அட்லாண்டா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரித் தாஸ் (48) என்பவர் மளிகை கடை வைத்திருந்தார். கடந்த புதன்கிழமை இரவு அங்கு வந்த மர்ம நபர், சுரித் தாசை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார்.

இந்த சம்பவம் நடத்த அடுத்த 8 மணி நேரத்தில் மற்றொரு குடியிருப்பில் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து இந்த சம்பவங்கள் நடந்திருப்பதால், மளிகைக் கடையில் கொள்ளையடிக்க நடந்த முயற்சியை தடுத்ததால் சுரித்தை சுட்டுக் கொன்றிருக்கலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment