Saturday, February 25, 2012இலங்கை::கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் வெலிக்கந்தை பிரதேசத்தில் கடத்திச் செல்லப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் இன்று (சனிக்கிழமை) உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏறாவூர் ஓடாவியார் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ஐ.எம்.இப்றாஹீம் (வயது 42) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர் கடந்த 4ம் திகதி வெலிக்கந்தை செவனப்பிட்டி பிரதேசத்திற்கு வியாபாரத்திற்காக சென்றிருந்த வேலை காணாமல் போனதாக அவரது குடும்ப உறவினர்கள் வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
கருவாடு மற்றும் தேங்காய் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கென பதின்மூவாயிரம் (13,000.00) ரூபா பணத்துடன் இவர் சென்றிருந்தார் என குடும்பத்தினர் தெரிவித்தனர். வெலிக்கந்தை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment