Saturday, February 25, 2012

அதிக அளவில் சேவை வரி செலுத்தியதற்காக சன் டிவி நிறுவனத்துக்கு சிறப்பு விருது!

Saturday, February 25, 2012
சென்னை::அதிக அளவில் சேவை வரி செலுத்தியதற்காக, சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ம் தேதி, மத்திய கலால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் ஆயகர் பவன் வருமானவரித் துறை அரங்கத்தில் கலால் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. வருமான வரித்துறை தலைமை ஆணையர் ஜியான் சந்த் ஜெயின், சென்னை மண்டல வருமான வரித்துறை (கஸ்டம்ஸ்) தலைமை ஆணையர் குசூப் சப்ஸதி, மத்திய கலால் தலைமை ஆணையர் (சென்னை) ஸ்ரீவத்சவா ஆகியோர், குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில், சென்னை மண்டலத்தில் அதிக அளவில் உற்பத்தி மற்றும் சேவை வரி செலுத்திய 18 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதிக அளவில் சேவை வரி செலுத்தியதற்காக சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்துக்கு, மத்திய கலால் தலைமை ஆணையர் ஸ்ரீவத்சவா விருது வழங்கினார். அதை, சன் டிவி தலைமை அலுவலர் (நிதி) வி.சி.உன்னி கிருஷ்ணன் பெற்று கொண்டார். இதேபோல், சிறப்பாக பணியாற்றிய வருமான வரித்துறை, கலால் துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

விழாவில், வருமான வரித்துறை தலைமை ஆணையர் ஜியான் சந்த் ஜெயின் பேசியதாவது: வருமான வரி செலுத்தும் முறை 1916ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அப்போது, வருமான வரி வசூல் ஸீ36 லட்சம் அளவில் இருந்தது. இது, தற்போது 4 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. பணி ஆட்கள் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு குறைபாடு போன்ற காரணங்கள் இருந்தபோதும், இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளோம். வருமான வரி செலுத்துவதை ஒவ்வொருவரும் தேசிய கடமையாக கொள்ள வேண்டும். வருமானவரி செலுத்துவது தொடர்பாக ‘வோடபோன்Õ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விரைவில் மறு மனுத்தாக்கல் செய்ய உள்ளோம். வருமானவரி பிரச்னை தொடர்பாக விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். இதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மண்டலத்தில் வருமானவரி வசூல் இலக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் என நிர்ணயித்து இருந்தோம். தற்போது, 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானவரி வசூலிக்கப்பட்டுள்ளது. அதற்காக வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. தமிழகத்துக்கு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்காக வருகின்றனர். அவர்கள் தவறாமல் வரி செலுத்துவதை கடமையாக கொள்ள வேண்டும். வரி செலுத்தும் திட்டத்தை எளிமையாக்க ‘ஆயகர் சேவாக்Õ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும். இவ்வாறு ஜியான் சந்த் ஜெயின் பேசினார். ஸ்ரீவத்சவா பேசுகையில், ‘2011- 2012ம் ஆண்டு சென்னை மண்டல மத்திய கலால் மூலம் ஸீ13,196.66 கோடி வருவாய் கிடைத்தது. தற்போதைய நிதியாண்டில் (2011-2012ம்) ஜனவரி வரை ஸீ11,413.71 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளதுÕ என்றார்.

No comments:

Post a Comment