Friday, February 24, 2012
ஜெனீவா::யுத்தத்தின் பின்னரான இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும்நல்லிணக்கப் பணிகளை சீர்குலைக்கும் வகையில் சில நாடுகள் செயற்பட்டு வருவதாக அரசாங்கம்குற்றம் சுமத்தியுள்ளது.
குறிப்பாக அமெரிக்க தலைமையிலான சில நாடுகள் இவ்வாறு இலங்கை நிலைமைகளை திரிபுபடுத்தி பிரச்சாரம் செய்து வருதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தலைமையிலான சில நாடுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும்பிரச்சாரம் ஒழுக்க விதிகளுக்கு முரணானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் புலிகளின் செயற்பாடுகளுக்குவலு சேர்க்கும் வகையில் அமையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில்தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து இலங்கைக்கு அமெரிக்காவிற்கும் இடையில் எதுவிதஇணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி தமராகுணநாயகம் இது தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமோ அல்லது ராஜதந்திரிகளோ ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் எவ்வித தொடர்பையும்பேணவில்லை என திட்டவட்டமாக தமராகுணநாயகம் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment