Friday, February 17, 2012இலங்கை::யாழ்ப்பாணம்-காங்கேசன்துறை கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கஞ்சா கடத்திச் சென்ற இரு இந்திய பிரஜைகள் கைது:-
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கஞ்சா கடத்திச் சென்ற இந்திய பிரஜைகள் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து 10 கிலோ 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (16) இரவு 08.35 அளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment