Friday, February 17, 2012

சென்னையில் 26-ந்தேதி கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மாநாடு: (புலி வால்) வைகோ-திருமாவளவன்- சீமான் பங்கேற்பு!

Friday, February 17, 2012
மானாமதுரை::தமிழர் தேசிய இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் க.பரந்தாமன் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நிருபர்களிடம் கூறிய தாவது:-

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூடங்குளத்தில் அணுஉலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் வருகிற 26-ந் தேதி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது.

சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெறும் இம் மாநாடு அணுஉலை எதிர்ப்புக்குழு சார்பில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கு
(புலிகளின்) பெரியார் திராவிடர்கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்குகிறார். மாநாட்டில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கக்குழுத் தலைவர் உதயக்குமார், மனித நேய மக்கள்கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் வடிவேல் ராவணன், தியாகி வெங்கட்ராமன், கவிஞர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் பா.ஜெயபிரகாசம் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு கூடங்குளத்தில் அணுஉலை நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் பேசுகின்றனர்.

மேலும் மாநாட்டில் இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

நாடு குட்டிசுவர் ஆவதற்கு ஒரு மாநாடு ....தலைவர்கள் என்றால் நல வழி காட்டவேண்டும் ...இப்படி ஓட்டுக்காக .................போல் அலைய கூடாது....மின்சாரத்திற்கு தமிழ்நாடு எவ்வளவு பிரச்சனையில் உள்ளது என்று கூட புரியாமல் ...ஜெயாவை எதிர்பதற்காக இந்த மாநாடு .ஜெயாவை எதிர்ப்பது ஒன்றே உன் கட்சியின் குறிக்கோள் . ...இதில் இருந்தே தெரிகிறது தமிழ் நாட்டு மக்கள் மேல் உமக்கு இருக்கும் அக்கறை ...நீர் எப்போதும் இலங்கை (புலி)தமிழருக்ககதானே பேசுவீர் ....தமிழ்நாடு உமக்கு எதிரி அதனால் தான் இப்படி துரோகம் செய்து கொண்டு இருகிறீர் ......உங்களால் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் கெடுதல் செயாதேர்ர்கள் ....இந்த மாநாடு நடத்தினால் சங்கரன் கோயிலில் உமக்கு ஆப்புதான் .........

No comments:

Post a Comment