Friday, February 17, 2012

நாட்டின் ஸ்திரதன்தமைக்கு எதிர்க்கட்சிகள் பெரும் அச்சுறுத்தலாகதிகழ்கின்றன - அமைச்சர் டியூ.குணசேகர!

Friday, February 17, 2012
இலங்கை::நாட்டின் ஸ்திரதன்தமைக்கு எதிர்க்கட்சிகள் பெரும் அச்சுறுத்தலாகதிகழ்கின்றன என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடிக்க ஆளும் கூட்டணியில்அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், எதிர்க்கட்சிகளின் சவால்களை வெற்றிகரமாகமுறியடிக்கக் கூடிய வல்லமை அரசாங்கத்திடம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வன்னி யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அரசாங்கம் மீதுபிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான முறுகல் நிலைமையின்விளைவுகளை அனைவரும் எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகக் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் போது அனைவரும் தியாகங்களைச்செய்யக் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment