Friday, February 17, 2012இலங்கை::மஹரகம பிரதேச்தில் போதைப் பொருள் கடத்திய பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் வைத்து சந்தேக நபரைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹெரோயின் போதைப் பொருளுடன் வைத்தியசாலை வாசலில் காத்திருந்தபோது பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த பிக்குவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, களுபோவில பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன ;பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மல்வானைப் பிரதேசத்திலும் நபர் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருளுடன்காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..
கப்பம் பெற முயன்ற நால்வர் கைது!
மொரட்டுவையிலும் கொழும்பிலும் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெற முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை பகுதியில் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் குறித்த வர்த்தகரை தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரியுள்ளமை தெரியவந்துள்ளது.
கப்பத் தொகையில் 35,000 ரூபாவை பெற்று எஞ்சிய பணத்தை பெற்றுக் கொள்ள முயன்ற போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சந்தேகநபர்கள் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதுடன், இவர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற முயன்ற மேலும் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொலை ஒப்பந்தம் ஒன்றை பெற்றுக்கொண்டதாகவும் அதனை நிறைவேற்றாமல் இருப்பதற்காக கப்பம் வழங்குமாறும் சந்தேகநபர்கள் வர்த்தகரை அச்சுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகநபரை கனேமுல்ல பகுதியில் கைதுசெய்யதுள்ளனர்.
No comments:
Post a Comment