Saturday, February 25, 2012இலங்கை::கண்டி திகன பகுதியில் 18 ஹெரோய்ன் பக்கெட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொல்கொல்ல மற்றும் திகன பகுதிகளைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக மெனிக்கின்ன பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஹபரணை, மாலிகாகந்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 11பேர் கைது!
சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹபரணை, மாலிகாகந்த பிரதேசத்தில் இவர்கள் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் ஜீப் வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment