Saturday, February 25, 2012
இலங்கை::ஜெனீவாவில் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை தூதுக்குழுவின் மற்றுமொரு பிரதிநிதிகள் குழுவினர் இன்று அதிகாலை ஜெனீவா பயணமானார்கள்.
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முல்லைத்தீவு மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கனகரத்தினம் ஆகியோரடங்கிய குழுவினரே பயணமானார்கள்.
ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளதெனவும், சமாதானத்ததை விரும்பாமல் தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க விரும்பும் மேற்கத்திய நாடுகளின் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களால் ஒரு போதும் ஜனநாயக விழுமியங்களை கொண்ட இலங்கை தேசம் அஞ்சப் போவதில்லையென்று தாம் ஜெனீவா புறப்படுவதற்கு முன்னர் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

No comments:
Post a Comment