Thursday, February 16, 2012இலங்கை::சிலாபத்தில் கடற்தொழிலாளர்கள் நேற்று முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட அமைதியின்மையினால் காயமடைந்த மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்கள் என வைத்தியசாலையின் திடீர் விபத்துக்கள் பிரிவு பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ஆரிவங்ச கூறினார்.
வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருபவர்களி்ன் உடல் நிலை தேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பிரதேசத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment