Thursday, February 16, 2012

சசிகலா தம்பி திவாகரனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Thursday, February 16, 2012
திருவாரூர்::சசிகலாவின் தம்பி திவாகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திருவாரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சரவணன் என்பவர் தன்னுடைய உறவினரைத் சசிகலாவின் தம்பி திவாகரன் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் எடையூர் போலீசார் திவாகரன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் திவாகரன், அவரது உதவியாளர் ரகுநாதன், செங்கமலத்தாயார் கல்லூரி மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் திவாகரன் உள்பட 3 பேரும் ஜாமீன் கேட்டு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஜாமீன் கொடுக்க அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த மனு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவரது வீட்டை இடித்த வழக்கில் திவாகரன் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment