Friday, February 24, 2012

நாட்டின் பாரிய அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் - லாஸ் ஹென்ரிக் துனெல்

Friday, February 24, 2012
இலங்கை::நாட்டில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு தாம் எப்போதும் ஒத்துழைப்பு வழங்குவதாக சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் உப தலைவர் லாஸ் ஹென்ரிக் துனெல் குறிப்பிட்டுள்ளார்.

அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நேற்று முற்பகல் சந்தித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் உப தலைவர் லாஸ் ஹென்ரிக் துனெல் குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்
இதன்போது அவர் நாட்டின் பல பகுதிகளையும் சென்று பார்வையிட்டதோடு இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து தெளிவான விளக்கத்தை பெற்றுகொண்டதாக அவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த சிந்தனை ரன்தொர செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது லாஸ் ஹென்ரிக் துனெலுக்கு எடுத்துக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment