Tuesday, February 21, 2012

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Tuesday, February 21, 2012
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதிகரித்துள்ள அத்தியவசியப் பொருட்களின் விலைகளை உடனடியாகக் குறைக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய, கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment