Tuesday, February 21, 2012டெல்லி::மேலும் ஐந்து இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவற்படையினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பி.டி.ஐ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
குஜராத் கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் பயணித்த மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர்கள் குஜராத்தின் போர்பந்தாருக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, இந்திய கடலோர காவற்படையின் துணை பரிசோதகர் யாதவ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர்.
No comments:
Post a Comment