Tuesday, February 21, 2012

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டன தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்: தேமுதிக!

Tuesday, February 21, 2012
சென்னை::சென்னையில் இன்று தேமுதிக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேமுதிகவின் 7வது பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்றது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பது ஒன்றே தீர்வு. தமிழக மீனவர்களின் கருத்தை அறிந்துகொள்ளாமல் இந்தியா இலங்கை இடையே கச்சத்தீவு தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமையை இழந்துள்ளதோடு, இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே இந்தியா இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யுமாறு தேமுதிக பொதுக்குழு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரும் 27ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஜெனிவாவில் மனித உரிமைகள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டன தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தேமுதிக பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment