Wednesday, February 15, 2012இலங்கை::தலன்கமவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று தனக்குத்தானே துப்பாக்கிச் சூடு:-
தலங்கம பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் நிலைய துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
காதல் பிரச்சினை ஒன்றின் காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஹத்தரெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொலிஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்!
மீரிகம பொலிஸ் நிலையக் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கச் சங்கிலி ஒன்றை பறித்துச்சென்ற நபரைக் கைதுசெய்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில், இனந்தெரியாத ஒருவரால் நேற்று இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீரிகம நகரை அண்மித்த பகுதியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மீரிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment