Wednesday, February 15, 2012சேலம்::இலங்கை தூதரக அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதானவர், வடிவேலு பாணியில் காமெடி செய்த சம்பவம் அரசு மருத்துவமனையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முகாம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் இலங்கை தூதரக துணை ஆணையர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சேலத்தில் இலங்கை தூதரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க தலைவர் பூமொழி மற்றும் காமராஜ் ஆகியோர், கருப்புக் கொடி காட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருவரையும் போலீசார் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக பூமொழியை சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். சோதனை முடிந்து செல்லும்போது பூமொழி, மருத்துவமனையில் திரண்டிருந்த பொதுமக்களிடம் நடிகர் வடிவேலு பாணியில் ‘எல்லோரும் பாத்துக்குங்க, நானும் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்‘ என்று சத்தமிட்டு டாட்டா காட்டிவிட்டு போலீஸ் வாகனத்தில் ஏறிச்சென்றார். இந்த சம்பவம் இறுக்கமான மனநிலையில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment