Sunday, February 26, 2012

மாகாண சபைகளுக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் தேவையில்லை-ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இரா.பிரபாகரன்!

Sunday, February 26, 2012
இலங்கை::மாகாண சபைகளுக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் தேவையில்லையென ஈரோஸ் என அழைக்கப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.

நேற்று(25.02.2012) மட்டக்களப்பு கோப் விடுதியில் நடைபெற்ற ஆளுமை உள்ள தலைமையை உருவாக்க ஒன்று படுவோம் எனும் தலைப்பில் ஈழவர் ஜனநாய முன்னணியான ஈரோஸ் நடாத்திய மாநாட்டின் போதே அதன் செயலாளர் இரா பிரபாகரன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று மாகாணங்களுக்கு பொலிஸ் காணி அதிகாரங்களை கேட்கின்றனர். இப்போது தமிழ் மக்களுக்கு தேவையானது பொலிஸ் காணி அதிகாரங்களில்லை. கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதும் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதும் தான் இன்றுள்ள மிக முக்கியமான தேவையாகும்.
இதை விடுத்து மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் கேட்பது தேவையற்ற விடயமாகும்.காணி பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை. காணி பொலிஸ் அதிகாரங்களை பெற்று நாம் என்ன செய்யப்போகின்றோம்.அரசாங்கம் நமக்கு காணி அதிகாரங்களை தந்துதான் உள்ளது. ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் அந்தப்பிரதேசத்திற்குரிய காணி அதிகாரங்களை கையாளுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே பிரதேச செயலாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதை நாம் சரியாக பயன் படுத்த வில்லை.
வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ஒரு ஆளுமை மிக்க நல்லதொரு தலைமையாகும்.அரசியல் பசப்பு வார்த்ததைகளை பேசியதும் அவர்களின் சுய நலங்களைப்பார்த்ததும் தான்; எமது தமிழ் மக்களின் கடந்த கால தமிழ் தலைமைகள் செய்த வேலையாகும்.இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும், இடம் பெயர்ந்ததும், இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதும், ஆயிரக்கணக்கான விதவைகளும் அனாதைகளாகவும் ஊனமுற்றவர்களாகவும் ஆகியதுதான் கடந்த யுத்தத்தின் விளைவாகும்.கடந்த 45, 50 வருடங்கள் எதிர்த்தரப்பு அரசியலில் இருந்து கூச்சல் போட்டதும் கும்மாளம் அடித்ததும்தான் மிகுதியாகும். யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் தமிழ் மக்கள் எந்த வொரு அபிவிருத்தியையும் காணவில்லை.பட்டினியாலும், வறுமையினாலும் வேலையில்லா திண்ணடாட்டத்திலும் தமிழ் மக்களும் தமிழ் இளைஞர்களும் திண்டாடுகின்றனர்.வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் பட்டதாரிகளும் படித்த இளைஞர் யுவதிகளும் வேலையில்லாமல் இருக்கின்றனர்.இதற்கு காரணம் நமக்கு நல்லதொரு தலைமை இல்லாமையே ஆகும்.
நல்லதொரு தலைமை இருந்திருந்தால் இந்தப்பிரச்சினைகள் நமக்கு ஏற்பட்டிருக்காது.வடக்கு கிழக்கிலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பார்த்துள்ளேன். அந்தக்கிராமங்களில் தமிழ் மக்கள் வீடில்லாமல் அடிப்படை வசதிகள் இல்லாமல் படும் துன்ப துயரங்களை பார்த்துள்ளேன். இந்நிலையில் இன்று யுதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படுவுது அபிவிருத்தியாகும். அவர்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படுவதாகும். அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்து செய்தது என்ன என நான் கேட்கின்றேன் எதை சாதித்தார்கள். வெறும் பூச்சியம்தான். இலங்கை இந்திய ஒப்பந்தம் கிழித்து வீசப்பட்டு அது புறக்கணிக்கப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை சரிவர பயன் படுத்தியிருந்தால் இன்று இந்த நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்காது.இந்த நிலையில் தான் ஆளுமையுள்ள ஒரு தலைமைத்துவத்தை எமது ஈழவர் ஜனநாயக முன்னணியான ஈரோஸ் உருவாக்கியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்தில் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலிருந்த முக்கியஸ்தர்கள் இன்று அவர்களில் நம்பிக்கை இழந்து இன்று எம்முடன் இணைந்துள்ளனர்.13மூன்றையும் தாண்டி அதிகாரங்களை தருவதாக ஜனாதிபதி கூறுகின்றார். நாம் ஜனாதிபதியின் மீத நம்பிக்கை வைத்து அதையாவது பெற்றுக்கொள்ள வேண்டும்.இன்று நமக்கிருக்கும் ஒரே வழி அதையாவது பெற்றுக் கொள்வதுதான்; இந்த சந்தப்பத்தையாவது நாம் பயன்படுத்த வேண்டும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.இதன் போது ஈழவர் ஜனநாயக முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment