Sunday, February 26, 2012

"என்கவுன்டர்' விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

Sunday, February 26, 2012
சென்னை::கொள்ளையர்கள் என்கவுன்டர் தொடர்பான வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.போலீஸ் என்கவுன்டர் தொடர்பாக, சுப்ரீம்கோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், முதற்கட்டமாக, சென்னை, எழும்பூர் 14 வது கோர்ட் மாஜிஸ்திரேட் கீதாராணி, 23ம் தேதி, என்கவுன்டர் நடந்த வீட்டை ஆய்வு செய்ததுடன், துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர்கள் கண்ணன் மற்றும் மாணிக்கவேல் ஆகிய 9 பேரிடம் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, நேற்று முன்தினம், கொள்ளையர்கள் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அடுத்தகட்டமாக, நேற்று மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையையும் ஆய்வு செய்தார். கொள்ளையர்களில் முக்கியமானவனான வினோத்குமாரின் உடலை வாங்க வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த என்கவுன்டர் தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, உத்தரவிட்டுள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் எட்டுவாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ள நிலையில், விசாரணையை 15 நாட்களுக்குள் முடித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து, தற்போது என்கவுன்டர் தொடர்பான விவரங்கள் அடங்கிய அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.

No comments:

Post a Comment