Wednesday,February 22,2012சென்னை::தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் மற்றும் கலந்துரையாடல் கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று காலை நடந்தது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் பூவராகவன், முன்னாள் எம்எல்ஏக்கள் யசோதா, விடியல் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகள், ஏன் வேண்டும் அணுமின்சாரம், சரித்திரம் படைக்கும் சாதனைகள், நாடு நலம் பெற கூடங்குளம்“ ஆகிய நூல்களை ஞானதேசிகன் வெளியிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் இருந்து காங்கிரஸ் பேச்சாளர்கள் 120 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் பேச்சாளர்களுக்கு அடுத்த மாதம் இறுதிக்குள் பயிற்சி முகாம் நடத்தப்படும். மத்திய அரசின் சாதனைகளை அவர்கள் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பது எப்படி என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
No comments:
Post a Comment